கல்வி விழிப்புணர்வுக் கூட்டம்
மேலத்தாங்கல் கிராமத்தில் கல்வி நிதி சார் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
' சேத்துப்பட்டு அடுத்த மேலத்தாங்கல் கிராமத்தில் கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அடுத்த மேலத்தாங்கல் கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேத்துப்பட்டு கிளை சார்பாக கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
.கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேத்துப்பட்டு கிளை மேலாளர் உமாதேவி தலைமை தாங்கினார். மேலத்தாங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஷகிலா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வங்கி மேலாளர் உமாதேவி பேசுகையில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிராமப்புற மக்களுக்கு சிறு வணிக கடன் ,மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் ,ஆதரவற்ற விதவை மற்றும் கை பெண்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கும் கடன் ,மகளிர் சுய உதவி குழு கடன்,குறைந்த வட்டிக்கு நகை கடன், பொதுமக்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி என வழங்கி சிறப்பாக சேவை செய்து வருகிறது .மேலும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ,கிராமப்புற வளர்ச்சிக்கு வங்கி செயல்பட்டு வருகிறது.
இதையெல்லாம் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என மேலாளர் உமாதேவி கேட்டுக்கொண்டார். மேலும் கிராமத்தில் புதியதாக சிறு சேமிப்பு கணக்குகள் தொடங்கி மூன்று சிறு வணிக கடன் , மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்க விண்ணப்பங்கள் வழங்கினார். கூட்டத்தில் கிராம பொதுமக்கள் விவசாயிகள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிவில் பிரகாஷ் நன்றி கூறினார்.