சேலம் செயின்ட் பால்ஸ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
சேலம் டிஸ்டிரிக் பீப்புள் சர்வீஸ் சொசைடி சார்பில் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 13:33 GMT
விழாவில் கலந்து கொண்டவர்கள்
‘சேலம் டிஸ்டிரிக் பீப்புள் சர்வீஸ் சொசைட்டி’ சார்பில் செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சொசைட்டி அமைப்பின் நிறுவனர் சந்திரன் தலைமை தாங்கினார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஐசக் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் அலெக்ஸ் பிரபு, ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சந்திரன் வழங்கினார். இந்த கல்வி உபகரணங்களுக்கான நிதி உதவியை எட்டிமாணிக்கம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மணிமாறன், நாராயணபிரியா ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.