ஊரணியில் கலக்கும் கழிவுநீர்
ஊரணியில் கலக்கும் கழிவுநீரை பாதாள சாக்கடையுடன் இணைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Update: 2024-01-01 02:07 GMT
சிவகங்கை நகர் பகுதியில் உள்ள ஆவரங்காடு, முத்துராமலிங்கம் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் லட்சுமி தீர்த்தம் என்ற பழமையான ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் மஜீத் ரோடு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் அந்த ஊரணி முழுவதும் மாசு அடைந்து நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும், இந்த ஊரணியில் தேங்கி இருக்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் மற்றும் முதியோர்களை கடிப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாகவும், தேங்கி நிற்கும் கழிவு நீரில் விஷ பூச்சிகள் அதிகளவில் வசிப்பதுடன் வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. எனவே முறையாக கரையை அமைத்து, நடைபாதையை ஏற்படுத்தி இந்த ஊரணியை சீரமைத்து கழிவு நீரை பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்