பதினெட்டாம் நூற்றாண்டு கால செப்பேடு ஆய்வு
பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-04-29 11:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. பழனிமலைக் கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்.
கணியர் ஞானசேகரன் உதவியோடு செப்பேட்டை ஆராய்ந்த நாராயணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் கூறியதாவது:இந்த செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது. செப்பேட்டை சிவகெங்கை அரசர், பழனியில் வசிக்கும் காசிப்பண்டாரத்தின் மகன் பழனிமலைப் பண்டாரத்துக்கு வழங்கி உள்ளார்.