தேகளீச பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-05-22 09:17 GMT
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 18ம் தேதி துவங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 8:30 மணிக்கு தேகளீச பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடந்தது.
மாலை 4:30 மணிக்கு தேகளீச பெருமாள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி சந்தனம், குங்குமம், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களுடன் வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடை, பருப்பு, பாயசத்துடன் நெய்வேத்தியம் செய்யப்பட்டு, கண்ணாடி மண்டபத்தில் எழுந்தள்ளினார்.
திருவாய்மொழி சேவாகாலம், விசேஷ பூஜைகள், சாற்றுமறை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.