இதய நோயால் முதியவர் எடுத்த சோக முடிவு
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் இதய நோயால் மனமுடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-10 01:53 GMT
இதய நோயால் தற்கொலை
நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள அலவந்தான்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குழந்தை இயேசு (63).இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இந்த இருதய நோயால் மனம் உடைந்த குழந்தை இயேசு நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதனை அறிந்த அவரது உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து மானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.