ஆலங்குளம் அருகே விபத்து: முதியவா் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 08:05 GMT
கோப்பு படம்
திருநெல்வேலி பேட்டை பவளமல்லி பூ தெருவைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் மகன் பந்தே நவாஸ் (62). இவா் திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் நோக்கி, நேற்று மாலை மொபெட்டில் வந்து கொண்டிருந்தாா்.
மாறாந்தை அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து லாரி டிரைவா் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த செயினுல் அப்தீன் மகன் அஷ்ரப்பிடம்(48) விசாரணை நடத்தி வருகின்றனா்.