ராஜபாளையத்தில் மாடு முட்டி முதியவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாடு முட்டி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-01-29 11:26 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண ராஜ் (79 ) ஓய்வு பெற்ற ஆசிரியர் வயது முதிர்ந்த நிலையில் தனது வீட்டு வாசலில் மாடு ஒன்று நின்றுள்ளது அதை விரட்ட முயன்றுள்ளார்.

அப்பொழுது அந்த மாடு அவரை முட்டி தள்ளியதில் கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் அருகே இருந்த சிலர் மீதும் மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் மாட்டை விட்டு வளர்க்கும் மாட்டு உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தும் இதுவரை மாடுகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்காமல் அலட்சியத்துடன் செயல்படும் மாட்டுஉரிமையாளர்கள் . தற்போது ஒரு மாடு கன்று குட்டி ஈன்று உள்ள நிலையில் தனது குட்டியை யாரும் தூக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் லட்சுமண ராஜ் உட்பட 3 பேரை முட்டி உள்ளது.

காயமடைந்த லட்சுமனராஜ் என்ற முதியவரை தனது வீட்டு வாசலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவிர்த்து உள்ளனர் மாடு யாரையும் அருகில் விடாமல் விரட்டியுள்ளது.

   ராஜபாளையம் வடக்கு காவல் துறை போலீசார் நீண்ட நேரம் போராடி காயப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத் தெருவில் வீட்டில் அருகே நடந்த சம்பவம் ஆனால் இராஜபாளையம் நகர் பகுதியில் காந்தி சிலை ரவுண்டானா வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து உள்ளதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அறிவித்ததை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News