கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2024-02-27 02:20 GMT

கொலை வழக்கில் 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் குடியிருப்பதற்காக ஒத்திக்கு பணம் கொடுத்து குடியிருந்து வந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் முருகனுக்கும், சிவக்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவக்குமார் வீட்டை காலி செய்து வேறொரு பகுதியில் குடியிருந்து வந்த நிலையில் 14.02.2020 அன்று முருகனிடம் ஒத்திக்கு கொடுத்த பணத்தை திரும்பி கேட்டதால் முருகனுக்கும் சிவகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது.

இந்த மோதலில் வீட்டின் உரிமையாளரான முருகன் வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை சரமாரியாக குத்தி தாக்கியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் மனைவி செல்வராணி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை முடி உற்ற நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் சிவகுமாரை கொலை செய்த குற்றத்திற்காக முருகன் (வயது 59) என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஆறு மாத கால மெய் காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News