அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

கரூர் அருகே முதியவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-18 15:15 GMT

படுகாயம் 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ரோடு, ஆர்விஇ நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல் வயது 76. இவர் மே 17ஆம் தேதி காலை 10 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் நத்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, வடிவேல் ஓட்டிய டூ வீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

Advertisement

இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த வடிவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த வடிவேலின் மகன் கண்ணன் வயது 49 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வடிவேல் ஓட்டிய வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த கார் எது? அந்த காரை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News