முருங்கை மரத்தில் ஏணியில் ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முருங்கைக்காய் பறிப்பதற்காக ஏணியில் ஏறும் போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-14 16:20 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் 78 வயதான முத்துக்கண்ணு. இவர் முருங்கைக்காய் பறித்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22 ம் தேதி முருங்கக்காய் பறிப்பதற்காக முருங்கை மரம் மீது ஏணியை வைத்து ஏறி உள்ளார்
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த்தில் படுகாயம் அடைந்தார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.