கொசுவா்த்தி சுருளால் தீ விபத்து: மூதாட்டி பலி

கோவில்பட்டியில் கொசுவா்த்தி சுருளால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Update: 2024-05-31 10:03 GMT

மூதாட்டி பலி 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கொசுவா்த்தி சுருளால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரஸ்வதி(80).

இவா் சம்பவத்தன்று இரவு வீட்டை உள்புறமாக பூட்டிவிட்டு கொசுவா்த்தி சுருளை பொருத்தி கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினாராம். கொசுவா்த்தி சுருளின் தீ சரஸ்வதி அணிருந்திருந்த ஆடையில் பட்டு தீக்காயம் ஏற்பட்டதாம்.

உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News