நாகையில் ஆட்டோவில் தேர்தல் விழிப்புணர்வு

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஆட்சியர் ஓட்டினார்.

Update: 2024-03-26 16:22 GMT

ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சியர்

நாகப்பட்டினம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவதற்காக நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏடிஎம் மகளிர் கல்லூரியில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பின்னர் 18 வயது நிரம்பிய மாணவிகள் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.

வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரல் உயர்த்துவோம், அதன் பெருமையை உணர்த்துவோம், 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதனை மையமாக கொண்ட மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி "தவறாமல் வாக்களிக்கவும்", "உங்களது வாக்கு உங்கள் குரல்",

"உங்களது வாக்கு விற்பனைக்கல்ல", "வாக்களித்திட பணம் பொருள் பெறுவது குற்றம்". வாக்கினை சரிபார்த்திட காகித தணிக்கை". "தேர்தல் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி 1950", "கண்ணியமாக வாக்களிப்போம்", "வேட்பாளர் பற்றி அறிந்திட KYC செயலி", "விதிமீறல்களை தெரியப்படுத்த CVIGIL செயலி" மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை உண்டு போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய

துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து ஒலி அறிவிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து ஒட்டு வில்லைகளை ஒட்டியும், தேர்தல் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இ

ந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்ரஞ்ஜித்சிங், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் .கோ.அரங்கநாதன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், நகராட்சி ஆணையர் திரு.நாராயணன், ஏ.டி.எம் மகளிர் கல்லூரி முதல்வர் ஆர்.அன்புச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News