குமரியில் மூத்த குடிமக்களின் தேர்தல் விழிப்புணர்வு  

தோவாளையில் குமரியில் மூத்த குடிமக்களின் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-03-26 02:08 GMT

 விழிப்புணர்வு 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைவான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வாக்குப்பதிவு சதவீதத்தினை உயர்ந்திடும் பொருட்டும், மூத்த குடிமக்கள் தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில்  மாதாவாலயம் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு 50 சதவீதம் என  குறைவாக பதிவானதை கண்டறிந்து, அப்பகுதிகளில் வாக்கு சதவீதத்தின் உயர்த்திடும் பொருட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு, அனைவரும் ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதன் மூலம், ஜனநாயகத்தில் தங்களது உரிமை நிலைநாட்டப்படும் என எடுத்துக்கூறப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டம் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீ ஜான்  தலைமையில்   உதவி திட்ட இயக்குநர்கள், சுயஉதவிக் குழுக்கள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News