தஞ்சாவூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
Update: 2024-04-02 17:12 GMT
தஞ்சாவூர் ரயில் நிலையம் வளாகத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் நேர்மையாக 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணியினை ரயில் நிலையம் வளாகத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக காந்திஜி வணிக வளாகம் வரை 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தியும், “தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா“, “உங்கள் வாக்கு, உங்கள் உரிமை“, “நமது வாக்கு நமது உரிமை” “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் நேர்மையாகவும், 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேரணியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தஞ்சாவூர் மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, வைரபாலா தியாகராஜன் குமரவேல், ஜோதிபாசு, கதிர்வேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.