மாட்டு வண்டியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
தத்தலூர் கிராமத்தில் மாட்டு வண்டியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி.
Update: 2024-04-02 15:55 GMT
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், தத்தலூர் கிராமத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024–ல் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக மாட்டுவண்டியில் பொதுமக்களுடன் சேர்ந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராஜேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.