மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரம் - போக்குவரத்து பாதிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை. இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2024-03-29 11:57 GMT

 போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு புறவழிச் சாலையில் அருகே காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதியில் இருந்து வேன்,பஸ், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News