தேர்தல் நடத்தை விதிமுறை-கரூரில் சுவரொட்டிகளை அழித்த ஊழியர்கள்
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் வந்ததால் கரூரில் சுவரொட்டிகளை ஊழியர்கள் அழித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை-கரூரில் சுவரொட்டிகளை கிழித்த ஊழியர்கள். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்கள் அறிவிப்பு செய்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும்,அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளும் விளம்பரம் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி,
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களிலோ, சுவர்களிலோ தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது என அறிவிப்பு செய்திருந்தது. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சி ஊழியர்கள் இன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களையும், பேனர்களையும், நோட்டீசுகளையும் கிழித்து அப்புறப்படுத்தினர்.