தேர்தல் பறக்கும் படை பணிகள் துவக்கம்

கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை தனது பணிகளை துவக்கியது.

Update: 2024-03-16 14:43 GMT

நாடெங்கும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. தேர்தலின் போது நடைபெறும் தில்லுமுல்லுகள், முறைகேடுகள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பணியாற்றும் அதிகாரிகள் கண்காணிக்கும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் பணியை துவக்கி உள்ளனர். முதல் நாள் இன்று ஆறு பறக்கும் படை வாகனங்களும், ஆறு நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அடங்கிய வாகனங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்தி வழி அனுப்பினர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மற்றும் அரசு துறை அதிகாரிகள்.

Tags:    

Similar News