பறக்கும் படை வாகன சோதனை துவக்கம்
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் பறக்கும் படையின் வாகன சோதனை தொடங்கியது
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் பறக்கும் படையின் வாகன சோதனை தொடங்கியது, இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி தேர்தல் பணியாளர்கள் தங்கள் பணிகளை துவக்கினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படை குழுக்களும் 12 நிலை கண்காணிப்பு குழுக்களும் நாலு காணொளி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அதன் பணிகள் துவங்கியது. அவ்வகையில் காஞ்சிபுரம் நகரில் நுழையும் வாகனங்களை இந்த பறக்கும் படை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி பகுதியில் வட்டாட்சியர் பிரியா தலைமையில், துணை காவல் ஆய்வாளர் தலைமை காவலர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் கொண்ட குழு அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் மாவட்ட முழுவதும் பறக்கும் படை குழுவில் சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் பட்டு புடவைகள் வாங்க, கோயில் தரிசனம் மேற்கொள்ள பல்வேறு மாநிலத்தில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்கள் அதிகாலையில் வரும் நிலையில் இந்த வாகன சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.