தேர்தல் பொது பார்வையாளர் தேர்தல் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குசாவடி மையங்களை ஆய்வு
காங்கேயம் பகுதியில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் தேர்தல் பாதுகாப்பாரை மற்றும் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், காங்கயம் வட்டாச்சியர் சு. மயில்சாமி மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Update: 2024-04-02 02:20 GMT
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 102 காங்கயம் சட்டமன்ற தொகுதியில் நேற்று, மதியம் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பாதுகாப்பு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறை, தபால் வாக்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் மேலும் காங்கயத்திலுள்ள வாக்குசாவடி மையங்கள் எனபடும் பூத்கள் அமைக்கப்பட உள்ள அரசு பள்ளிகளையும் மேற்பார்வையிட்டார். முக்கிய மற்றும் பாதித்கப்படக்கூடிய பகுதியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அறைகள், வாக்கு எண்ணும் கூடங்கள் அவற்றின் அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பொது முகவரி அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், காங்கயம் வட்டாச்சியர் சு. மயில்சாமி மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.