கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் - அர்ஜூன் சம்பத்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2024-03-18 02:40 GMT
அர்ஜுன் சம்பத்

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-     தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.      

ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது.  மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.     போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது.

எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.   தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.      

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது.  வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள். கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா?, இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News