தேர்தல் பணி அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-29 02:50 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று (27.03.2024) நடைபெற்றது.

பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News