பூந்தமல்லியில் ஆபத்தான முறையில் மின் கம்பம்
பூந்தமல்லியில் ஆபத்தான முறையில் மின் கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 14:33 GMT
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, அணைக்கட்டு சேரி கிராமத்தில் சேதமடைந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதால் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால்,
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.