15 மணி நேரம் போராடி யானை மீட்பு
கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனா்
By : King 24x7 Website
Update: 2023-12-23 17:04 GMT
கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த வட்லக்கி பகுதியில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்தபோது கூட்டத்தில் வந்த சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததுள்ளது.யானை கிணற்றில் விழுந்த நிலையில் அதனுடன் வந்த யானைகள் காப்பாற்ற முயற்சித்ததுடன் தொடர்ந்து பிளிறியபடி அங்கேயே நின்றுள்ளது.யானையின் பிளிரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் இரவு நேரம் என்பதாலும் தண்ணீர் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று காலை முதல் மீட்பு பணியை துவங்கி வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டியவர்கள் சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த யானை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தற்போது யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் கேரளா வனப்பகுதியில் இருந்தும் தமிழக வனப்பகுதியில் இருந்தும் ஏராளமான யானைகள் இடம் பெயர்ந்து வருவதாக தெரிவித்தவர்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஜேசிபி உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை மீட்கப்பட்டது எனவும் தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்ததால் யானைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறியவர்கள் இருப்பினும் ஒரு குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.