மருதமலை அருகே மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை ருசிபார்த்த யானைகள்
மருதமலை அருகே மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை ருசிபார்த்த யானைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் மருதமலை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வலம் வருவதும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலணி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கடையை உடைத்து அங்கு இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றுள்ளது.
மளிகை கடையின் உரிமையாளர் கடையை திறக்க சென்றபோது ஷட்டர்கள் உடைக்கபட்டு பொருட்கள் சேதமடைந்து கிடப்பதை கண்டவர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவக் அளித்துள்ளார்.
யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.