தாட்கோ மூலம் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புடன கூடிய பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.;

Update: 2024-01-14 08:08 GMT

ஆட்சியர் ஜெயசீலன் 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்புபடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு அடிப்படை ஆயுர்வேத மசாஜ் பயிற்சி, அடிப்படை டயாலிசிஸ் தொழில் நுட்பவல்லுநர் பயிற்சி, அடிப்படை அவசர மருத்துவ தொழில் நுட்பவல்லுநர் பயிற்சி, அடிப்படை மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்பயிற்சி, அடிப்படை செவிலியர் பயிற்சி, அடிப்படை பஞ்சகர்மா தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை மூத்த பராமரிப்பு பயிற்சி, அடிப்படை எக்ஸ்ரே தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சி என பல்வேறு மருத்துவம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை முன்னனி பயிற்சி நிறுவனங்கள் முலம் வழங்கி வேலை வாய்ப்பு பெற்றுதர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். எனவே தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News