தங்கும் விடுதியில் பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

சுவாமிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாளர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமாக நடக்கிறது.;

Update: 2024-05-30 03:53 GMT

  சுவாமிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாளர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமாக நடக்கிறது.  

மயிலாடுதுறை மாவட்டம், அதிகமான புருஷன், பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் தினசீலன் வயது 31, திருமணம் ஆகாதவர்,இவர் சுவாமிமலை யில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும், மேல் மாடியில் தினசீலன் தங்கி இருந்த அறை கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள், ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். அப்போது தினசீலன் தங்கி இருந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

உடன் இதுகுறித்து சுவாமிமலை போலீசாருக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுவாமிமலை போலீசார் மற்றும் தஞ்சை தடவியல் துறையினர் ஆகியோர் தனியார் விடுதிக்கு சென்று தினசீலன் உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த இந்து போனதின சீலன் தாயார் கஸ்தூரி வயது 50 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணியாளர் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,,,

Tags:    

Similar News