மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-07-05 06:12 GMT

 ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புலியடிதம்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை(எண்-7579) யில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் மீது விஷச்சாராய வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஊழியர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்யவலியுறுத்தியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சிஐடியு மாவட்டத்தலைவர் திருமாறன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச்செயலர் மலைராஜ், தொமுச மாவட்ட துணைத்தலைவர் சேவியர் அருள்துரை, சிஐடியு மாவட்டச்செயலர் குமார், பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் மெய்யப்பன் உள்பட 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News