நாகையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதால் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நாகை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்வு பெற வாழ்வாதார இயக்கம் இணைந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் உள்ள ஆதார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வரும் 30 12 2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு கலை அறிவியல் வணிகம் பட்டதாரி ஐடிஐ டிப்ளமோ பொறியியல் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் வேலை வாய்ப்பு மேற்பட்ட முன்னணி தனியா நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதுஇவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.