எடப்பாடியில் மழையில் நனைந்தபடி என் மண் என் மக்கள் நடைப்பயணம்
எடப்பாடியில் மழையில் நனைந்தபடி என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 09:18 GMT
நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 135 வது தொகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மாவட்ட தலைவர் சுதீர்முருகன் தலைமையில் இன்று இரவு 7 மணி அளவில் வெள்ளாண்டி வலசு காளியம்மன் கோயில் எதிரே இருந்து எடப்பாடி பஸ் நிலையம் வரை நடை பயணம் மேற்கொண்டார்.
இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டம்,ஒயிலாட்டம்,கூடிய கலை நிகழ்ச்சி உடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சாலையோரம் நின்று கை கொடுத்து வரவேற்றனர். இதில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்