வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பு: எஸ்பியிடம் மனு
வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எஸ்பியிடம் இஸ்லாமியர்கள் மனு அளித்தனர்.;
மனு அளிப்பு
தேனி மாவட்டம் போடி புதூர் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 3.60 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் 63 நபர்கள் ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் சிலர் குடிசை அமைத்து மேலும் சில இடங்களை ஆக்கிரமிக்க துவங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போடி அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து போடி நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் இன்று 200க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் இருவர்களையும் நேரில் சந்தித்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி,
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வகுப்புவாரியத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர். ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றாவிட்டால் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் என அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.