கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
பணபரிமாற்ற புகாரின் பேரில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.;
Update: 2024-03-10 06:53 GMT
அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்றது.
ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் வசித்து வரும் அனீஸ் பிரசன்னா திருச்சி சாலையில் கார் ஷோரூம் வைத்து தொழில் செய்து வருகிறார்.இன்று அவரது வீட்டிற்கு வந்த 15ற்க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினிகள்,செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.பணபரிமாற்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.