பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யணும்

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-02-15 03:47 GMT

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். 

சேலம் கருப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அதன் பொறுப்பு அலுவலர்களால் உரிய நேரத்தில் பணிகள் தொடங்கப்படுகிறதா? என்பது குறித்தும், சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கருப்பூர் பேரூராட்சி ராஜகணபதிநகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 59 லட்சத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கன்னங்குறிச்சி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.

அப்போது பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News