கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு : அமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாளை (21.03.2024) உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Update: 2024-03-20 12:02 GMT

கனிமொழி 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாளை (21.03.2024) உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தி,மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் விமானம் மூலம் நாளை 21.03.2024 தூத்துக்குடி வருகை தருகிறார். தூத்துக்குடி வருகை தரும் அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாளை (21.03.2024) வியாழக்கிழமை காலை 6.45 மணி அளவில் தூத்துக்குடி F.C.I குடோன் அருகே மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தூத்துக்குடி மாநகரத்திலுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தேசப்பிதா காந்தி பெருந்தலைவர் காமராஜர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அண்ணல் அம்பேத்கார், தேவர் திருமகனார், குரூஸ்பர்னாந்து, இந்திராகாந்தி ஆகிய தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள், தொண்டர்கள், I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News