புதிய குழந்தைகளுக்கு பள்ளியில் உற்சாக வரவேற்பு
சிவகங்கை அருகே பள்ளியில் சேர்ந்த புதிய குழந்தைகளை மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 16:17 GMT
பள்ளிக்கு வந்த மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே படமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. படமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இருதய அருளரசி தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன்,
வட்டார கல்வி அலுவலர் பாலாமணி ஆகியோர் முன்னிலையில் புதிதாக சேர்ந்த 10 குழந்தைகளுக்கு மாலையணிவித்து மலர்தூவி வரவேற்றனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் விழாவினை சிறப்பாக நடத்தினர்.