சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கொலை; இ.பி.எஸ். கண்டனம்!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்க் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2024-07-06 12:16 GMT
Edapadi palanisamy
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்க் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்படுகிறார் எனில், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? என்றும் கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு சட்டம் ஒழுங்கின் நிலை உள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.