அதிமுக என்ற டைட்டானிக் கப்பலை இபிஎஸ் உடைத்து விட்டார் - நடிகர் செந்தில்

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் அதிமுகவை டைட்டானிக் கப்பல் போல் வைத்திருந்தார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி எடுத்து ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார் என நடிகர் செந்தில் பேசினார்.

Update: 2024-04-05 06:13 GMT

 நடிகர் செந்தில் பிரசாரம்  

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகரும் பாஜக அமைப்பு செயலாளருமான செந்தில் சின்னையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில் அண்ணாமலை பெரிய பணக்காரர் இல்லை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.மோடியுடன் சேர்ந்து என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தியுள்ளார் .நான் முன்னதாக அம்மா கட்சியில் இருந்தேன் அந்த கட்சி சரியில்லாததால் , நல்ல கட்சி வேண்டும் என பாஜகவுக்கு வந்துவிட்டேன். புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவர் அம்மாவும் நல்லா டைட்டானிக் கப்பல் வைத்திருந்தார்கள் அதை எடப்பாடி எடுத்து ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார்.அதேபோல கட்சியையும் உடைத்து எறிந்து விட்டார்கள்.கச்சத்தீவை மோடி கையில் எடுத்துள்ளார்.இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News