சமத்துவ பொங்கல்!

நத்தத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்தார் மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன்.

Update: 2024-01-12 10:30 GMT

சமத்துவ பொங்கல் விழா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்து சமத்துவ பொங்கல் கொண்டாடியமாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பு சமத்துவ பொங்கல் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பொங்கல் வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பொங்கல் வைத்த பெண்களுக்கு புத்தாடை வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்துடன் மாட்டு வண்டியில் பயணம் செய்து பொங்கல் பண்டிகையை பொதுமக்களுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் ஏற்பாடு செய்திருந்தார். நத்தம் ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News