காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஏரளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2024-01-16 05:46 GMT

பொங்கல் விழா 

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மலைக்கோட்டை தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் மகளிர் காங்கிரஸ் அஞ்சு முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கி கரும்பு பரிசு பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேவாதளம் தலைவர் மலைக்கோட்டை முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் முன்னால் கவுன்சிலர் ஹேமா கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல் வெங்கடேஷ் காந்தி சம்சுதீன் சண்முகம் இளைஞர் காங்கிரஸ் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தலைவர் ரபீக் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி ஊர் தலைவர் வெற்றி மற்றும் மாரிமுத்து சிந்தை ஸ்ரீராம் வீரமணி வினோத் புவன் செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News