வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் !
செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 07:15 GMT
செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,காட்டாங்குளத்தூர் ஊராட்சி மன்ற குழு தலைவர் உதயா கருணாகரன்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,வார்டு உறுப்பினர்கள்,வார்டு செயலாளர்கள்,திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.