1200 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு
வேலூர் மாவட்டத்தில் லாரி ட்யூப் களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள சாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
Update: 2024-05-13 02:29 GMT
வேலூர் மாவட்டம், முழுவதும் போலீசார் இன்று மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த 275 மது பாட்டில்கள், 1200 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 2000 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.