பாரதியார் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு ஆர்ஓ குடிநீர் எந்திரம் மற்றும் இன்வெர்ட்டர் உபகரணங்கள் சேவாலயா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2024-03-18 05:30 GMT

நலத்திட்ட உதவி வழங்கல் 

பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் உள்ள பழமை மாறாத பாரதியார் இல்லத்திற்கு, நாள்தோறும் சுற்றுலா பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்,  சமூக ஆர்வலர்கள் என சுமார் 1000க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர், இங்கு வருபவர்களுக்கு போதுமான குடிநீர் இல்லாத காரணத்தினாலும், மின்சாரம் இல்லாத நேரத்தில், உரிய மின் விளக்குகள் மற்றும் மின் விசிறி இயங்காமல் இல்லத்திற்கு வருவோர் பெரும் அவதியுற்று வந்தனர். 

Advertisement

தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை மற்றும் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் 35 ஆண்டுகளாக 27 கிளைகளைக் கொண்ட சேவாலயா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில் பாரதியார் இல்லத்திற்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான R. O குடிநீர் மற்றும் மின்சார இன்வெர்ட்டர் ஆகிய உபகரணங்களை எட்டையாபுரம் பாரதியார் இல்ல பொறுப்பாளர் மகாதேவியிடம் சேவாலயா அறக்கட்டளை தொண்டு நிறுவன அமைப்பினர் வழங்கினர். 

இந்தநிகழ்ச்சியின் போது மேனாள் மாவட்ட நூலக ஆய்வாளர் கோவில்பட்டியை சார்ந்த பூல் பாண்டியன். மேனாள் எட்டயபுரம் தேர்வு நிலை துணை வட்டாட்சியர் பொன் பரமானந்தம், தென்காசி மாவட்டசேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் மற்றும் சேவாலயா ஊழியர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags:    

Similar News