அமைச்சருடன் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் சந்திப்பு
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்த சமத்துவ மக்கள் கழகத்தினர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.;
Update: 2024-03-18 05:34 GMT
அமைச்சருடன் சமத்துவ மக்கள் கழகத்தினர்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.