மனித உரிமை ஆணைய மாநிலத் தலைவரை சந்தித்த பாதுகாப்பு கவுன்சில் நிர்வாகிகள்.
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரை சந்தித்த மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் நிர்வாகிகள்.
Update: 2023-11-29 12:11 GMT
தமிழகத்தின், மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி பாஸ்கரன் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில், கரூரில் செயல்படும் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தமிழக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட தலைவர் தனபால், தமிழக சேர்மன் நல்ல தம்பி, கரூர் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர், கரூர் மாவட்ட உறுப்பினர் ஷெரின், திண்டுக்கல் மாவட்ட உறுப்பினர்கள் மதுரை வீரன், ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை நிமித்தமான சந்திப்பை சிறப்பித்தனர்.