சிறு தானிய உணவு பொருட்களின் கண்காட்சி
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு -2023 உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த சிறு தானிய உணவு பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த சிறு தானிய உணவு பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், பார்வையிட்டு தெரிவித்ததாவது: நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாக 120 ஆண்டுகள் மேல் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். உணவே மருந்து என வாழ்ந்தனர்.
பாரம்பரிய சிறுதானிய உணவுகளை மறந்துவிட்டோம். மீண்டும் பழைய உணவு முறைகளை பின்பற்றி சிறுதானியங்களை பயன்படுத்துவோம். சிறுதானியங்களின் நன்மைகள் அறிவோம். தெம்பு தரும் கம்பு உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்கவல்லது. திடமான உணவிற்கு திணையினை எடுத்துக்கொண்டால் எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும், கர்ப்பம் தரிப்பதற்கு துணை நிற்கும். வளமான வாழ்விற்கு வரகு உண்டால் சர்க்கரை அளவை குறைக்கிறது,
மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி கண் நரம்பு நோய்களை தடுக்கும் குணம் உண்டு, மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது. குன்றாத வாழ்விற்கு குதிரைவாலியினை உண்டால் உடலை சீராக வைக்க உதவுகிறது, ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.
வைட்டமின் அ. வைட்டமின் ஓ, வைட்டமின் இ, வைட்டமின் ஈ. இரும்பு பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைவாக இருக்கிறது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் கேழ்வரகு இரும்புச் சத்து ரத்த சோகையை குணப்படுத்துகிறது, உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை தரும், உயர் ரத்த அழுத்தம் கல்லீரல் நோய்கள். இதய நோய், ஆஸ்துமா, மற்றும் தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
சரிவிகித உணவிற்கு சாமை இரத்த சர்க்கரை அளவை சீராக்கும், மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது, புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது, இதய சம்பந்தமான நோய்களின் இருந்து நம்மை காக்கிறது. சோர்வை நீக்கும் சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இவ்வகை சிறுதானியங்களில் குறைந்த அளவை குளுக்கோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பற்றக்கூடியது போன்ற அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். . இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், இணை இயக்குநர், வேளாண்மைத்துறை அரக்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ஸையித் சுலைமான், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மீனாம்பிகை, தன்னார்வலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.