கன்னியாகுமரியில் நான்கு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு 

கன்னியாகுமரியில் படகு சவாரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-15 13:34 GMT
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை வரும் போது மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.        தற்போது பொங்கல் பண்டிகைக்காக 17- ம் தேதி வரை பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து அலுவலகங்களும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் குடும்பம் குடும்பமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.        

Advertisement

இதனால் நேற்று முதலே கன்னியாகுமரி மக்கள் வெள்ளத்தால்  திணறுகிறது.  குறிப்பாக  இன்று 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு சேவை நான்கு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று  காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை  காலை 6 மணிக்கு தொடங்கியது. மாலையில் 4:00 மணி பதிலாக 6 மணி வரையிலும் இந்த படகு சேவை தொடர்ந்து நடைபெறும். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News