அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

டாஸ்மார்க் அருகே நின்று கொண்டு இருந்தவரிடம் அரிவாளைக் காட்டி ரூ.500 பறித்தவர் கைது.

Update: 2023-11-02 12:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருணாச்சலம் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 46 இவர் அக்டோபர் 30ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அருகே உள்ள கொளந்தானூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த, கரூர், காயத்ரி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 25 என்ற இளைஞர் சதீஷ்குமாரிடம் அரிவாளை காட்டி ரூபாய் 500 ஐ பறித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் என்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது சந்தோஷ்குமார் அரிவாளை காட்டி மிரட்டி, பணம் பறித்தது தெரிய வந்தது.

எனவே கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே பசுபதிபாளையம் , தாந்தோணி மலை, வெள்ளியணை, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News