நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கண் மற்றும் பல் சிகிச்சை முகாம்

Update: 2024-07-24 11:49 GMT

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கண் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 23.07.2024 செவ்வாய்; கிழமை காலை 10 மணி முதல் 24.07.2024 புதன் கிழமை மாலை 5 மணி வரை கண் மற்றும் பல் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல்லில் இயங்கி வரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துமனையும்ரூபவ் சேலம் வினாயகா மிஷின் சங்கராச்சாரியர் பல் மருத்துவனையும் இணைந்து இந்த முகாமை நடத்தினர். இந்த மருத்துவ முகாமிற்கு வருகை புரிந்த மருத்துவர்களையும், பணியாளர்களையும், பள்ளியின் பொருளாளர் அவர்கள் வரவேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் “ மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதாலும், அதனால் ஏற்படும் பிரச்சனைளும் இன்றைக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கண்களை பராமரிப்பதும், தினமும் மாணவர்கள் இரண்டு முறை பல் சுத்தம் செய்து பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்தின் அடிப்படை என்று கூறினார்ரூபவ் மேலும் சிறுவயதிலேயே குழந்தைகள் கண்ணாடி அணிவது மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார். இந்த குறைகளையெல்லாம் போக்குவதற்கே பள்ளியில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுவதாக கூறினார்”.

பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து மாணவரூபவ் மாணவிகளுக்கும் தனித்தனியாக கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுடன் மருத்துவ மனைக்குச் சென்று மேல் சிகிச்சை பெற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்ரூபவ் பணியளர்கள்ரூபவ் ஓட்டுநர்கள், அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், வருகை புரிந்து முகாமை சிறப்பாக நடத்திய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் பள்ளி முதல்வர் அவர்கள் நன்றி கூறினார். மாலை 5 மணியளவில் முகாம் நிறைவுப்பெற்றது.

Tags:    

Similar News