பேராவூரணி அரசுப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

பேராவூரணி அரசுப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-28 09:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாசன் கண் மருத்துவமனை, கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், நேதாஜி மருதையார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஏ தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

தலைமையாசிரியர் தனலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், கண் மருத்துவர்கள் கேசவன், அஜிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் 10, 11, 12 வகுப்பு மாணவிகள் 1, 050 பேரை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் 52 மாணவிகளுக்கு கண் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் ஒருங்கிணைப்பாளர் எஸ். பாண்டியராஜன், லயன்ஸ் சங்க செயலாளர் நடராஜன், உடற் கல்வி ஆசிரியர் அன்னமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News